12

78

Home » , » வளம் தரும் வாத்து

வளம் தரும் வாத்து

வளம் தரும் வாத்து


வாத்து

வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி குறைவதோடு, வாத்துகள் இறப்பும் நேரிடும். ஆகவே, இத்தகைய சூழலில் முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.

வாத்து வளர்ப்பின் நன்மைகள்

  • கோழி முட்டை எடையுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டை 1520 கிராம் கூடுதல் எடை உடையது.
  • மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடக்கூடுயது.
  • குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும்.
  • வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

தீவன பராமரிப்பு

இறைச்சி வாத்துகளுக்கு
இவ்வகை வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2 முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது. அப்போது அதனுடைய தீவன மாற்றுத்திறன் 3.25 ஆகும்.

முட்டை வாத்துகளுக்கு

முதல் 20 வாரத்திற்கு வாத்துகளுக்கு 12.5 கிலோ தீவனம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற கணக்கில் ஒராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு
அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள் புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன.

இவ்வகையான தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானது அல்ல.

ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்பும் கூடுதலாக நெல் போன்ற தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ நாம் கொடுக்கலாம்.

ஒரு சில விவசாயிகள் குச்சி தீவனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான தீவனங்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் அதிகமாக 100 கிராம் வரை கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கப்படும்பொழுது தொடர்ச்சியாக முட்டையிடுவதற்கு போதிய ஊட்டச்சத்துகள் தீவனத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன.

குடற்புழு நீக்கம்

அதிக முட்டை இடுவதற்கு குடற்புழு நீக்கம் மிக முதன்மையானது. வாத்துகளை தட்டைப்புழு, உருண்டைப்புழு, நாடாப்புழு தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முட்டை உற்பத்தி திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் அவசியம்.

வாத்துகளை தாக்கும் நோய்கள்

  • வாத்து காலரா
  • வாத்து பிளேக்
இத்தகைய நோய்கள் அதிக நட்டத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்கும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஆகவே, முட்டை உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு உயர்தர இனங்களான காக்கி கேம்பல் மற்றும் இண்டியன் ரன்னர் வாத்துகளை வளர்த்து அவற்றிற்கு மேய்ச்சல் நிலங்களில் உள்ள தானியங்களை தவிர கூடுதலாக தானியங்களையோ அல்லது தீவனங்களையோ கொடுத்து பராமரித்தோமானால் அதிக முட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள்

கூஸ் வாத்து என்பது வாத்து வகையை சார்ந்தது. கூஸ் வாத்து ஒரு சில இடங்களில் மடை வாத்து என்றும் பங்களா வாத்து என்றும் அழைக்கப்படுகின்றன.
கூஸ் வாத்துக்கள் வேகமாகவும், மேய்ச்சலில் உள்ள புல் அதிகமாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவையாகவும் உள்ளது.
இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த அளவு இடவசதி இருந்தாலே போதுமானது ஆகும்.
கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை.
இந்த கூஸ் வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர அவற்றின் இறகானது தலையனை மற்றும் இறகுப் பந்து தயாரிக்க உதவுகின்றன.
மேலும் இவை காவல்காப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கூஸ் வாத்தும், வாத்துக்களை போன்றே நீர் நிலைகளிலும், அறுவடை செய்த விளைநிலங்களில் உள்ள தானியங்களையும் உண்டு வாழக்கூடியது.
4 முதல் 20 கூஸ் வாத்துக்களை வீட்டின் புறக்கடையில் வளர்க்கலாம்.

அவ்வாறு வளர்க்கும் பொழுது சமையல் கழிவுகளை தீவனமாக பயன்படுத்தலாம்.

கூஸ் வகைகள்


  • சைனீஸ்
  • எம்டன்
  • ஆப்ரிக்கன்
  • ரஸ்யன்
  • டொலூஸ்
இந்த வகையான கூஸ் இனங்கள் அதிக வருமானத்தை தரக்கூடியது. முற்றிலும் வளர்ச்சியடைந்த கூஸ்வாத்து 5 முதல் 6 கிலோ கிராம் வரை வளரக்கூடியது.
இவை ஆண்டிற்கு 50 முதல் 100 முட்டைகள் வரை இடக்கூடியது. ஒரு முட்டையின் எடை 100 முதல் 120 கிராம் வரை இருக்கும்.

பிராய்லர் வகை கூஸ்வாத்து 8 முதல் 9 வாரங்களில் 5 முதல் 6 கிலோகிராம் வரையிலும் வளரக்கூடியது.
இவ்வகை கூஸ் இனங்கள் 1 கிலோ கிராம் எடை பெறுவதற்கு 4 கிலோகிராம் தீவனம் தேவைப்படுகிறது.
இளம் கூஸ் வாத்து குஞ்சுகளுக்கு 2 முதல் 3 வாரம் வரை கோழி தீவனத்தை அளிக்கலாம்.
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் பொழுது 5 பெண் வாத்திற்கு 1 ஆண் வாத்து வீதம் வளர்க்கப்பட வேண்டும்.
கூஸ் முட்டையின் அடைகாலம் 29 முதல் 34 நாட்கள் ஆகும்.

டிசம்பர் மாதம் முதல் முட்டையிட தயாராகிறது. அப்பருவத்தில் மேய்ச்சல் தீவனம் மட்டுமல்லாமல் கூடுதலாக தானியமோ (அ) தீவனமோ கொடுத்தோமானால் அதிக முட்டை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
புறக்கடையில் மட்டுமின்றி கூஸ் வாத்து வளர்ப்பதை பெரியதொழிலாக நடைமுறைப் படுத்தினால் இறைச்சி மற்றும் இறகிலிருந்து அதிக வருவாய் பெற வாய்ப்பு உள்ளது

Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups