12

78

Home » , » கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்... Get beauty leg...

கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்... Get beauty leg...




  உடல் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்போம். ஆனால் அவ்வாறு இருப்பதற்கு, உடலைப் பராமரிப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஏனெனில் பெண்கள் தான் எப்போதும் ஷாட் ஸ்கர்ட், ட்ரௌசர் போன்ற மார்டன் உடைகளை அணிகின்றனர். எனவே அப்போது கால்கள் காணப்படும் போது, நன்கு அழகாக பொலிவோடு காணப்பட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சொல்லப்போனால், மற்ற உறுப்புகளைப் பராமரிப்பதை விட, கால்களை அதிகம் பராமரிக்கமாட்டார்கள். நமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். எனவே எப்போது கால்களில் அதிகமான உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளில் லாக்டிக் ஆசிட் உருவாகி, கால்களானது பார்ப்பதற்கு பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். எனவே இத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக் கொள்ள ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தினமும் செய்து வந்தால், கால்கள் அழகாக பொலிவோடு மின்னும்.



தண்ணீர்

 உடலுக்கு நீரானது மிகவும் முக்கியம். ஏனெனில் நீர்ச்சத்து உடலில் இருந்தால் தான், உடல் நன்கு அழகாக ஆரோக்கியமாக காணப்படும். ஆகவே கால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கால்களில் எந்த ஒரு தசைப்பிடிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.



உணவுகள்

கால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகள் எளிதில் ஏற்படும். ஆகவே எந்த ஒரு இரத்த ஓட்டப்பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமலிருக்க ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சாலமன், வால்நட் மற்றும் வெண்ணெய் பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. மேலும் சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகளையும் சாப்பிட்டால், கால்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.

உடற்பயிற்சி

கால்கள் நீண்ட நேரம் நடப்பதால், அவை சோர்ந்து இருக்கும். எனவே தினமும் படுக்கும் போது கால்களை சிறிது நேரம் தரையில் படுத்துக் கொண்டு, சுவற்றின் மேல் நீட்டிக் கொண்டு படுப்பதால், கால்கள் நன்கு புத்துணர்ச்சியோடு காணப்படும்.



வைட்டமின் ஈ லோசன் 
உடலுக்கு அழகைக் கொடுக்கும் ஒரு சத்து என்னவென்றால் அது வைட்டமின் ஈ தான். தற்போது கடைகளில் விற்கும் லோசன்கள் அனைத்திலும் வைட்டமின் ஈ சத்து இருக்கும். ஆகவே அத்தகைய சத்துக்கள் நிறைந்த லோசனை கால்களுக்குத் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதுவே வெளியே வெயிலில் செல்லும் போது, மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்



அழுக்குகளை நீக்குவது 


கால்களின் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே கால்களுக்கு பொலிவைத் தருவதற்கு கால்களுக்கான மாஸ்க் க்ரீம் போட்டு தேய்த்து, ஊற வைத்து பின் உரித்து எடுக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, நன்கு சுத்தமாக பொலிவோடு இருக்கும்.



காலணி 

எப்போது காலணி அணிவதாக இருந்தாலும், அவை நடப்பதற்கு எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும். மேலும் ஸ்டைல் என்று ஹீல்ஸ் போட்டு நடந்தால், கால் மற்றும் குதிகால்களில் வலி ஏற்படுவதோடு, இடுப்பு வலியும் ஏற்படும். பின் அந்த மாதிரியான காலணிகள் கால்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான காலணிகளை தவிர்ப்பது நல்லது. மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கால்கள் வலுவோடு வறட்சியின்றி ஆரோக்கியமாக இருக்கும். 





.வேறு ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..


.






Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups