12

78

Mun

Wednesday, May 6, 2020


மேலும்....

Banner

Monday, May 4, 2020


மேலும்....

தமிழகத்தில் 100-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரிப்பு....பீலா ராஜேஷ்

Tuesday, March 31, 2020


சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்....

இத்தாலின் அறிவிப்பு..

உயிர்த்த ஞாயிறு தினம் வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அறிவித்துள்ளது.
ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைவடைந்து வருவதாகவும் இத்தாலி கூறியுள்ளது.
இத்தாலியில் நான்காவது வாரமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 11,591 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்....

வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல்....

ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர்கள் தேவைக்கேற்ப பொது சுகாதார பரிசோதகர் அல்லது சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் வாகனங்கள் தொற்றுநிலைமை வழமைக்கு திரும்பும் வரை தடுத்துவைக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
மேலும்....

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 .

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்....

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம்............................

கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனங்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியை வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறியுள்ளார்.
மேலும்....

Friday, June 7, 2019

முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி



தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

* பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

* ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.

* நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.

* 3 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.

* 2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

* 1 டேபிள்ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
மேலும்....

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

பாரத செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்களுக்கானவை

மருத்துவ உணவு

காளான் அறுவடை

மண்புழு உற்பத்தி

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups