கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனங்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியை வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறியுள்ளார்.