கிராமபுரங்களில் வீட்டுக்கு வீடு நாட்டு கோழி வளர்ப்பார்.அதையே கூடிய அக்கஐயுடன்கோழிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் அதிக லாபம்பெறலாம்.இன்றைய சூழலில் நாட்டு கோழிக்கு நல்ல விலை கிடைக்கின்றது.450 சதுர அடி இருந்தால் பேதும் 10கோழி வளர்த்தால் மாதம் ரூ2500 வருமானம் ஈட்டலாம்.
ஒரு பெட்டை கோழி ஆண்டுக்கு 3 பருவங்களில் முட்டையிடும்.ஒவ்வொருமுறையும் 15முட்டைகள்இடும்.முட்டையிடும்திகதியை வரிசையாகஎழுதிவைத்து.கடைசியாகஇட்ட9நாட்களின்முட்டைகளைஅடைவைப்பதுலாபகரம்.நல்லவளர்ச்சிபெற்றபெட்டைக்கோழியால்9முட்டைகளைஅடைகக்முடியும்.அடுப்புசாம்பல், ம ணல்ஆகியவற்றைக் கூடையில்நிரப்பி ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பை எற்படுத்த கரித்துண்டும்
இடியைத்தாங்க இரும்புத்துண்டும் போட்டுவைக்க வேண்டும் இந்தக் கூடையில் கோழியை அடைகாக்க செய்வதன்மூலம் 9 முட்டைகளும் பொரியும் வாய்ப்பு உள்ளது.
குஞ்சுகள் பொரிந்ததும் அவற்றுக்கு முதல் வாரம் மஞ்சள் கலந்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.பின்னர் 3 வாரங்களுக்கு ஏதேனும் ஒரு வைட்டமீன்டானிக் கொடுக்கலாம். வாரம் ஒருமுறை அரச கால்நடைகளில் கோழிக்கு தடுப்புசிப்போடவேண்டும்.
கோழி வளர்க்கும் இடத்தை சுற்றி 4 அடி உயரத்திற்கு வலையால் வேலி போட வேண்டும்.வேலியோரம் கீழ் மண்ணை குவித்து வைத்து.சிமன் உற்றினால் பிற உயிரினங்களால் பாதிப்பு ஏற்படது.வலை போட்டுள்ள பகுதியில் 3அடிக்கு3அடி என்ற அளவில் சதுரமாக 3 அடி உயரத்தில் 3குடிசை போட வேண்டும். நாட்டுக்கோழி குப்பையில் புரண்டு இறக்கையை உதறும். இதன்மூலம் உடம்பில் இருக்கும் செல் பேன்ற உயிரினங்கள் வெளியேறும்.
பண்ணையில் குப்பை குழிக்கு வாய்ப்பில்லை.எனவே தரையில் சாம்பல்,மணலை கலந்து வைக்கவேண்டும்.தீவனத்தொட்டி,தண்ணீர் குவளை என்பவற்றை வைக்க வேண்டும்.கோழிகளை சுகந்திரமாகத் திரிய விட வேண்டும்.
10கோழிளுக்கு ஒரு சேவல் என வளர்கவேண்டும்.சில கோழிகள் பறந்து வெளியே செல்லும்.அவற்றுக்கு மட்டும் ஒரு பக்க4விரல் அளவுக்கு இறக்கையை வெட்டி விட வேண்டும். கோழிகளின் உணவுக்காக கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்புக்கழிவுகள்.காய்கறிகழிவுகள்,இலைகள், வீணாகும் தானியங்களை கொடுத்தால் போதும்5 மாதங்களில் ஒன்றரை கிலே எடைக்கு வளர்ந்து விடும். நாட்டு கோழி விற்பதில் சிரமம் இல்லை விற்பது தெரிந்தால் வியாபாரிகள் தேடி வந்து வேண்டி செல்வார்.