WINTER
SEASON
FOODS...
குளிர்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது..!
நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதில் விட்டமின் சி-க்கு பெரும்பங்கு உள்ளது.எனவே அதிக அளவு விட்டமின் சி அடங்கியுள்ள கருப்பு மிளகு குளிர்காலத்தில் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.எனவே மிளகு ரசம்,மிளகு தக்காளி சூப் போன்றவற்றை குளிர்காலத்தில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீர் நல்ல பலனைத் தரும்.இதற்கு காரணம் பெருஞ்சீரகத்தில் 20 சதவீதம் விட்டமின் சி உள்ளதுதான்.எனவே சீரகத்தை அதிக அளவில் உணவில் சேர்க்கும் போது,உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரசை அழிக்க ரத்த வெள்ளை அணுக்களுக்கு வலு கிடைக்கிறது.

எடை குறைவதற்கு மட்டும் கிரீன் டீ பயன்படுவதில்லை.க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உடலின் பாதுகாப்பு வளையத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.எனவே குளிர்காலத்தில் நீங்கள் நோய்வாய்ப்படுவது பெருமளவில் தடுக்கப்படுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மாவுச் சத்து மட்டுமல்லாது,நன்மை தரக்கூடிய ஆன்டி ஆக்சிடண்ட் மூலக்கூறுகளும் உள்ளன.எனவே மனித உடலுக்கு தேவையான ஆற்றலையும்,நோய் எதிர்ப்புத் திறனையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு அளிக்கும்.
இந்திய உணவுப் பொருட்களில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் மற்றும் சல்ஃபர் ஆகிய தாது உப்புகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது.
நெத்திலி மீனில் புரோட்டின் மட்டுமல்லாது ஒமேகா-3 சத்தும் அதிகமாக உள்ளது.ஒமேகா 3 ஊட்டச்சத்து நாம் ஆரோக்கியமாக இருக்க காரணமாக இருக்கும் டி செல்களுக்கு புத்துணர்வு ஊட்டுகிறது.
இயற்கை கிருமி நாசினி என அழைக்கப்படும் மஞ்சள் தொற்று வியாதிகளுக்கு சிறந்த மருந்தாகும்.குளிர்காலத்தில் வெயில் அதிகம் இருக்காது என்பதால் கிருமிகள் வெகு எளிதாக பரவும்.இந்த சூழ்நிலையை சமாளிக்க மஞ்சளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.