12

78

Home » , » சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள்

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள்



சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள்…
வாழைத்தண்டு சாறு:
வாழைத் தண்டு சிறுநீரகக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அது கரைந்து விடவும் கூடியது. எனவே வாழைத்தண்டுச் சாறு எடுத்து, தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்துவிடும். வாழைத்தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீரகத்துக்கு நல்லது.
பிரஞ்சு பீன்ஸ்:
இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்து விடும்.
வாழைச்சாறு:
சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலிதீன் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கன்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்துக் கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும்.
துளசி:
துளசி இலையின் சாறு எடுத்து அதனு டன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.
மாதுளை:
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும். அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.
Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups